கடற்கரையில் குவியும் பிளாஸ்டிக் - மறுசுழற்சியில் ஈடுபடும் தன்னார்வலர்கள்..!

0 1932

லேசியாவில் கடற்கரையோரம் குவியும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, மறுசுழற்சி முறையில் வீட்டு உபயோகப் பொருட்களாக தன்னார்வலர்கள் உருமாற்றி வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தாக மாறிவருகிறது, பிளாஸ்டிக். மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் டன் கணக்கில் நிலத்திலும் நீரிலும் குவிந்து கிடக்கின்றன. பிளாஸ்டிக்கின் பேராபத்தை உணர்ந்த நாடுகள் இப்போது பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்கின்றன.

பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் முதலில் உள்ளது மலேசியா. அங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு நபர் சுமார் 16 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், மலேசியாவின் கடற்கரையோரம் பல்லாயிரக்கணக்கான டன் பிளாஸ்டிகள் குவிந்து வருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, மறு சுழற்சி செய்து வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தன்னார்வலர்கள்.  

தி சீ மங்கி ((The Sea Monkey)) என்ற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள், ஹெங் ஹியாப் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து,  வாகன உதிரி பாகங்கள், வீட்டு உபகரணங்களைத்  தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

இதுகுறித்து, “சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிப்பவற்றில் பிளாஸ்டிக் முதன்மையானதாக உள்ளது. அதனால், எங்களால் முடிந்த அளவுக்குச் சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்ய முயல்கிறோம்” என்கின்றனர் தன்னார்வலர்கள். ஒவ்வொரு வருடமும் சீனா, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ்  மற்றும் வியட்நாம் நாடுகள் மட்டும் உலகின் 60 சதவிகித பிளாஸ்டிக்கை, அதாவது எண்பது லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments