ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் துபாய்க்குச் செல்லத் தடை

0 2636
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் துபாய்க்குச் செல்லத் தடை

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் துபாய் விமான நிலையங்களுக்குச் செல்ல 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4ஆம் நாள் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது.

கொரோனா இல்லை எனச் சான்றிதழ் பெற்றவர்களையே ஏற்றி வர வேண்டும் என விதிகள் உள்ளன. அதை மீறியதற்காக இன்று முதல் அக்டோபர் இரண்டாம் நாள் வரை துபாயின் விமான நிலையங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 15 நாட்களுக்குத் துபாய்க்கு இயக்கப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சார்ஜாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments