துணை முதலமைச்சர் பதவி வேண்டும்! கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்

0 4332
துணை முதலமைச்சர் பதவி வேண்டும்! கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்

துணை முதலமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டு கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு கடவுளுக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த புதன்கிழமை யாதகிரி மாவட்டத்திலுள்ள காடே துர்கா தேவி கோவிலுக்கு அமைச்சர் ஸ்ரீராமுலு சென்று வழிபாடு செய்தார். அப்போது துர்கா தேவி பாதத்தில் அவர் வைத்த காகிதத்தில் “கண்டிப்பாக துணை முதலமைச்சர் பதவி வேண்டும்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற போது அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைப்பது உறுதி என்று பேசப்பட்டு வந்தது. துணை முதலமைச்சர் பதவி கேட்டு மேலிடத்துக்கு பலமுறை கோரிக்கை வைத்து வந்த அமைச்சர் ஸ்ரீராமுலு அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments