செப்டம்பர் 24ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்பு

0 627
செப்டம்பர் 24ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்பு

செப்டம்பர் 24ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க எட்டு உறுப்பு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆக்ரமிப்பு காஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் வரைபடத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளிநடப்பு செய்திருந்த நிலையில், இந்த மாநாடு நடைபெறுகிறது.

கொரோனா பேரிடர் களைய சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ள நிலையில் நிதி திரட்டுவது குறித்து சார்க் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments