சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 86 திட்டங்கள் - கப்பல் போக்குவரத்து இணையமைச்சர்

0 1872
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 86 திட்டங்கள் - கப்பல் போக்குவரத்து இணையமைச்சர்

சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 86 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக, கப்பல் போக்குவரத்து இணையமைச்சர் மன்ஷுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை 36 திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகவும், 72 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் தடையில்லா சான்று பெறுவது, பொதுமக்கள் கருத்து கேட்பது, திட்டங்களை ஆய்வு செய்வது, போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments