5 சீன ஹேக்கர்கள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுப்பதிவு

0 758
அமெரிக்கா, இந்தியாவில் பெரியளவில் நடைபெற்ற ஹேக்கிங் விவகாரம்: 5 சீன ஹேக்கர்கள் மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்கா குற்றச்சாட்டுப்பதிவு

அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அரசுகளின் இணையதளங்களை, ஹேக்கிங் செய்த புகாரில், 5 சீனர்கள் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, மலேசியாவைச் சேர்ந்த 2 வர்த்தகர்களும், ஹேக்கிங் புகார்களின் பின்னணியில் சிக்கியிருக்கின்றனர். பெரியளவில் நடைபெற்ற இந்த ஹேக்கிங் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்கா, 5 சீன ஹேக்கர்கள் மீது, வாஷிங்டன் நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

5 சீன ஹேக்கர்களுக்கும், 2 மலேசிய வர்த்தகர்கள் பண உதவி செய்து குற்றச்செயலில் ஈடுபட தூண்டியதோடு, அந்த ஹேக்கர்கள் மூலம் திருடப்படும் தகவல்களை, சட்டவிரோதமாக விற்றதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments