நடப்பாண்டில் 50,000... இலவச விவசாய மின்னிணைப்புகள்

0 11839
நடப்பாண்டில் 50,000... இலவச விவசாய மின்னிணைப்புகள்

நடப்பாண்டில் ஐம்பதாயிரம் இலவச விவசாய மின்னிணைப்புகள் வழங்கப்படும் என்றும், தட்கலில் மின்னிணைப்பு பெற விரும்புபவர்கள் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. 

5 குதிரைத் திறன் மோட்டார்களுக்கு இரண்டரை லட்ச ரூபாயும், ஏழரை குதிரைத் திறன் மோட்டார்களுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், 10 குதிரைத் திறன் மோட்டார்களுக்கு 3 லட்ச ரூபாயும், 15 குதிரைத் திறன் மோட்டார்களுக்கு 4 லட்ச ரூபாயும் ஒருமுறைக் கட்டணம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஒருமுறைக் கட்டணத்தைச் செலுத்தும் 25 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின்னிணைப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. விருப்பமுள்ளோர் தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 31 வரை பதிவு செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

சாதாரண வரிசை முன்னுரிமையில் 2003 மார்ச் 31 வரை பதிவு செய்த விண்ணப்பங்களுக்கும், 2003 ஏப்ரல் முதல் 2004 மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட்டவற்றில் திருத்தப்பட்ட சுயநிதித் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தும் ஆயிரம் விண்ணப்பங்களுக்கும் இலவச விவசாய மின்னிணைப்புகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments