தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

0 780
பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்ததினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்ததினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டது.

சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 70அடி உயர கொடிக்கம்பத்தில் பா.ஜ.க கொடியை ஏற்றிவைத்த மாநிலத் தலைவர் எல்.முருகன், கல்வெட்டை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மணலி புதுநகரில் மோடி பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்டு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு புடவை வழங்கப்பட்டது. கோவை செல்வபுரத்திலும், புதுக்கோட்டை திருமயத்திலும் 70 கிலோ கேக் வெட்டப்பட்டது.

இதேபோல் புதுக்கோட்டை, திருவப்பூர், திருப்பரங்குன்றம் பகுதிகளில் பால்குடம் மற்றும் முளைப்பாரி  எடுத்துச் செல்லப்பட்டு கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments