சமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - எல் முருகன்

0 1189
சமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - எல் முருகன்

பிரதமர் நரந்திரமோடியின் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பாண்டிபஜாரில் பாஜக சார்பில் 70 அடி நீளத்திற்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பாஜக மகளிர் அணி சார்பில் செய்யப்பட்டிருந்த அந்த கேக்கை மாநில தலைவர் எல் முருகன் வெட்டினார்.

முன்னதாக எல் முருகன் நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக வந்த போது, மகளிர் அணியினர் உற்சாகமாக நடனமாடினர்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொலி காட்சியை பாஜக மாநில தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பெரியாரின் பிறந்தநாளுக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, சமூக நீதிக்காக போராடியவர் பெரியார், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று முருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments