2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்கள் விவரங்கள் ஆன்லைனில் வெளியீடு

0 745
கின்னஸ் உலக சாதனை 2021 புத்தகத்தில் இடம் பெற்றவர்களின் விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

கின்னஸ் உலக சாதனை 2021 புத்தகத்தில் இடம் பெற்றவர்களின் விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் 4 அடி 5.6 அங்குலங்கள் உயரம் கொண்ட ஃபிராங்க் என்பவர், உலகின் மிக சிறிய பேருந்து ஓட்டுநர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

மார்கோ ஜார்ஜ் என்பவர் மணிக்கு 122 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பைக் ஓட்டியபடி ஸ்டண்ட் செய்து அசத்தி உள்ளார்.

நைரீஜியாவைச் சேர்ந்த எச்சே சினோசோ என்ற 11 வயது சிறுவன், தலையில் கால் பந்து வைத்துக்கொண்டு கால் முட்டிகளால் மாற்றி மாற்றி ஒரு நிமிடம் தொடர்ச்சியாக மற்றொரு பந்தை கிக் செய்து சாதனை புரிந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த லூக் ராபர்ட்ஸ், 2 எலிகளை கொண்டு மேஜிக் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த சோராவர் சிங், ஸ்கேட்டிங் ஷூ அணிந்தபடி 30 வினாடிகளில் 135 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பால் ஸ்கார்டினோ, 5 ஆயிரத்து 306 ஃபன்கோ பாப்பின் பொம்மைகளை சேகரித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments