திண்டிவனம் அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான வைர மோதிரங்கள் கொள்ளை - 5 பேர் கைது

0 672
திண்டிவனம் அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான வைர மோதிரங்கள் கொள்ளை - 5 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 2 கோடி ரூபாய் மதிப்புடைய 4 வைர மோதிரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, தனது 4 வைர மோதிரங்களை விற்பனை செய்ய நண்பர் ராவணன் வழக்கறிஞர் பிரகலாதன் ஆகியோருடன் கடந்த 13ம் தேதி கூட்டேரிப்பட்டு பகுதிக்கு சென்றார்.

வழியில் கோபாலபுரம் என்ற இடத்தில் கருணாநிதியின் காரை மடக்கி மிளகாய் பொடி தூவி கத்தி முனையில் வைர மோதிரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் பரந்தாமன், மணிகண்டன், அருள்முருகன், மகேஷ், விஜயசேகர் என 5 பேரை கைது செய்துள்ள போலீசார், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments