தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள்... முதலமைச்சர் மலர்தூவி மரியாதை..!

0 1339

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளையொட்டி அவரின் உருவப்படத்துக்குத் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா  சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் கொண்டாடப்பட்டது. பெரியார் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை:

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டிச் சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments