அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்

0 755

துருக்கியில் அதிவேகமாக வந்த கார் கடைக்குள் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 2 சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தென்கிழக்கு மாகாணமான காஸியான்டப் என்ற இடத்தில் சக்கர வண்டியில் ஒரு குழந்தையை அமர வைத்து விட்டு, அதன் தாயார் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். குழந்தையின் சகோதரி அதனருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்து கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று குழந்தைகளுக்கு சில அடி தூரத்தில் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தக் காட்சிகள் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments