மஹாளய அமாவாசை : திதி கொடுக்க புரோகிதர் வீடுகளில் நீண்ட வரிசையில் கூட்டம்!

0 12423

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் முன்னோர் களுக்கு தரப்பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளதால்,புரோகிதர்கள் வீடுகளில் மக்கள் குவிந்துள்ளனர்.

 கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அதாவது ஆவணி 17 ஆம் தேதி  மஹாளய பக்ஷம் ஆரம்பமாகி இன்று செப்டம்பர்  17 ஆம் தேதியோடு மஹாளய அமாவாசையோடு முடிவடையப் போகிறது.  நமது மூதாதையர்களான பித்ருக்கள் அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயபட்ச தினங்களில் தான் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை .எனவே இந்த தினங்களில் மறைந்த நம் பெற்றோர்கள் ,உறவினர்கள் நண்பர்களை நினைவில் கொண்டு அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்தால் அந்த ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடைகின்றன என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் இன்று மஹாளய அமாவசை  கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமான இந்த தினத்தில் தமிழகம் முழுவதுமுள்ள புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நினைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்கள், நதிகள், கடற்கரைகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் புரோகிதர்களின் வீடுகளிலேயே மக்கள் திதி கொடுக்க தொடங்கியுள்ளனர். அங்குள்ள புரேகிதர் ஒருவரின் வீட்டில் திதி கொடுப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை. மக்கள் ஒவ்வோருவராக புரோகிதரின் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு பூஜை நடத்தி முன்னோர்களுக்கு எள்ளு சாதத்துடன் பிண்டம் பிடித்து திதி கொடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments