எத்தனை காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது - உச்சநீதிமன்றம் கேள்வி

0 413
நாட்டில் எத்தனை காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டில் எத்தனை காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பதிக்கப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் இரண்டு மாதத்திற்குள் பதிலளிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும் அதிகார அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் எழுந்தன, இதையடுத்து மனித உரிமைகளை பாதுகாக்க நாடு முழுவதும் காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றுஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தனித்தனியாக அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா எந்த கோணத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற கேள்விகளும் இதில் எழுப்பப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments