பல்லாவரம், வண்டலூர் மேம்பாலங்கள் இன்று திறப்பு...

0 11918

சென்னை புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம் மற்றும் வண்டலூரில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, இரண்டு உயர்மட்ட மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வாக, கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 2 மேம்பாலங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகிய நிலையில், தற்போது கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, இன்று காலை 9.30 மணியளவில் வண்டலூருக்கும் அதை தொடர்ந்து பல்லாவரத்திற்கும், நேரில் வருகை தரும் முதலமைச்சர் மேம்பாலங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments