இந்தியா- சீனா எல்லைப் பிரச்சனை... மாநிலங்களவையில் ராஜ்நாத்சிங் இன்று விளக்கம்..!

0 649
இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.

இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.

3 மாதங்களுக்கும் மேலாக நிலவி வரும் இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த செவ்வாயன்று மக்களவையில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசியவர், எல்லைப்பகுதியில் மோதல்களை அமைதியாக தீர்ப்பதில் மட்டுமின்றி, தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா உறுதியாக உள்ளது என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக, மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் இன்று உரையாற்ற உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments