பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்

0 2643
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில மாணவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாணவர்களின் நலன் கருதி 17 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த தரவரிசைப் பட்டியல் வரும் 25 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இணையதளத்தில் தங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதையும் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments