ஆம்புலன்சுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்ற ரவுடி

0 977
ஆம்புலன்சுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்ற ரவுடி

ஆந்திர மாநிலம் ஓங்கோலில் ஆம்புலன்சுக்கு தீவைத்து விட்டு தப்பிச் சென்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அவசர உதவி எண் 100க்கு அவ்வப்போது போன் செய்து தொல்லை கொடுத்து வந்த சுரேஷ் என்ற அந்த நபர், அதிகாலை 4 மணிக்கு, காவல்நிலையத்திற்கு வந்த தன்னை கைது செய்யுமாறு கூறியிருக்கிறான்.

அவனை அங்கிருந்து போகும்படி போலீசார் அறிவுறுத்தியபோது, ஜன்னல் கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்டுள்ளான்.

மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் போலீசார் அழைத்துச் சென்றபோது, தான் வைத்திருந்த தீப்பெட்டி மூலம், அங்கிருந்த சானிடைசரை தீப்பிடிக்க வைத்துள்ளான். இதில், உள்பகுதியில் பற்றிய நெருப்பு, பின்னர், ஆம்புலன்ஸ் முழுவதும் பரவி, தீப்பிடித்து எரிந்து நாசமானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments