போரிடாமல் வெற்றி பெறுவது எப்படி..? 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகத்தை பின்பற்ற சீனா முயற்சி

0 4874
போரிடாமல் வெற்றி பெறுவது எப்படி..? 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகத்தை பின்பற்ற சீனா முயற்சி

6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போர்க்கலை பற்றிய சீன புத்தகத்தை பின்பற்றி, போரிடாமல் வெற்றி பெறும் தந்திரத்தை லடாக்கில் பின்பற்ற சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

பாங்கோங் ஏரிக்கரையில் படைகளை குவித்துள்ள சீனா, தனது ராணுவ வலிமையை பயன்படுத்தி அங்குள்ள மலைச்சிகரங்களை கைப்பற்ற முயன்றது. ஆனால் அதை இந்திய படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இதைத் தொடர்ந்து பஞ்சாபி வீரர்களை கவர அந்த மொழியில் உள்ள பாடல்களை சீனா ஒலிபெருக்கிகளில் வைத்து தந்திரம் செய்கிறது.

டெல்லியில் உள்ள அரசியல் எஜமானர்களின் விருப்பத்திற்காக கடுங்குளிரில் மலைகளில் காவல் காக்க வேண்டுமா என்ற இந்தி பிரச்சாரங்களும் ஒலிபரப்ப படுகின்றன. 1962 போரின் போதும் இதே மாதிரியிலான தந்திரங்களை சீனா பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments