உலகத் தமிழ் மாநாட்டை எதிர்க்கட்சிகள் நடத்தாதது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

0 1454
உலகத் தமிழ் மாநாட்டை எதிர்க்கட்சிகள் நடத்தாதது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

இருமொழி கொள்கை குறித்து பேசும் எதிர்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.   

சட்டப்பேரவையில் பேசிய  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்,  எம்எல்ஏக்கள் மேஜையில் இருந்த மருத்துவ புத்தகத்தில் மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் இருந்ததை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார். 

இதற்கு  பதிலளித்த  அமைச்சர்,  இந்தியிலுள்ள மூலிகைகளின் பெயர்கள் மற்ற மாநிலங்களும் அறியும் வகையில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார். 

2 உலகத் தமிழ் மாநாட்டை அ.தி.மு.க. அரசு நடத்தியிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஏன் நடத்தவில்லை எனவும் கேள்வியெழுப்பினார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன்,  உலக தமிழ் மாநாடு நடத்தினீர்களா என ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments