தமிழகத்தில் 3,5,8ம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு நடத்தப்படாது-அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

0 23516
தமிழகத்தில் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  புதிய கல்விக் கொள்கை குறித்து சிறப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் அனுமதி மாட்டோம் என்றும், சமூக நீதிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments