இந்தியாவில் டொயோட்டாவின் முதலீடு தொடரும்- டொயோட்டா நிறுவன துணை தலைவர் தகவல்

0 538
இந்தியாவில் டொயோட்டாவின் முதலீடு தொடரும்- டொயோட்டா நிறுவன துணை தலைவர் தகவல்

பிரபல பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தாது என்று வெளியான செய்திகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரும்,டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவன துணைத் தலைவரும் மறுத்துள்ளனர்.

இந்தியாவில் வரிவிகிதங்கள் அதிகமாக இருப்பதால் வர்த்தக விரிவாக்கம் செய்யப்போவதில்லை என டொயோட்டா கூறியதாக நேற்று தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஜவ்டேகர், அடுத்த ஆண்டில் அந்த நிறுவனம் இந்தியாவில் மேலும் 2000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை உறுதி செய்துள்ள டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் துணத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவ தமது நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments