மெடிக்கல்லில் புகுந்து கொள்ளை... தப்பிய திருடனை சிக்க வைத்த சமூக இடைவெளி தடுப்பு!

0 6875
லட்சுமணன்

ற்கெனவே 53 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஐந்து நாள்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த திருடன் ஒருவன் மருந்து கடையை கடப்பாரையால் உடைத்துத் திருட முயன்ற போது மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல்நிலையம்  அருகே மெடிக்கல் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த மெடிக்கல் நள்ளிரவில் திறந்துள்ளது என்று போலீசாருக்குத் தகவல் கிடைத்ததும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கண்டனர். போலீஸார் வந்ததையடுத்து கடைக்குள் இருந்த ஒருவன் தப்பி ஓடினான்.  வெளியே ஓடியவன் கையில் கடப்பாரை இருந்தது. அப்போது கடை முன்  சமூக இடைவெளிக்காகக் கட்டப்பட்டிருந்த மரக்கட்டையில் கடப்பாரையுடன் மோதி கீழே விழுந்து போலீஸாரிடத்தில் சிக்கிக் கொண்டான். அவனைப் பிடித்த போலீசார் கைது செய்து திருடிய  37,000  ரொக்கத்தையும்  கைப்பற்றினர். 

பிடிபட்டவன் பெயர் வட்சுமணன் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறதாங்கியைச் சேர்ந்தவன் எனவும்  தெரிய வந்தது. லட்சுமணன் கடப்பாரை, ஸ்குரூ டிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி பூட்டை உடைத்து திருடுவதில் கைதேர்ந்தவன். தமிழகமெங்கும் இவன் மீது 53 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பழைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமணன் 5 நாட்களுக்கு முன்புதான்  சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளான்.

நேற்று மாலை சூப்பர் மெடிக்கலில் தலைவலிக்கு மருந்து வாங்க லட்சுமணன் சென்ற போது, மெடிக்கல்லின் உரிமையாளர் பணத்தை எண்ணி கல்லா பெட்டிக்குள் வைப்பத்தை பார்த்துள்ளான். உடனே நள்ளிரவு நேரத்தில் கடப்பாரையைக் கொண்டுவந்து ஷட்டரை உடைத்து உள்ளே சென்றுள்ளான். அப்போதுதான் சிக்கிக் கொண்டான். 

இதே பகுதியில் நான்கு தினங்களுக்கு முன்பு காவல் அதிகாரி வீட்டில் 16 - பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளை போனது, இந்த சம்பவத்துக்கும்  இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments