ராமசாமி படையாட்சியாரின் 103ஆவது பிறந்ததினம்-அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

0 561

விடுதலைப் போராட்டத் தியாகியும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 103ஆவது பிறந்த நாளையொட்டிச் சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு ஆகியோர் ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவியும் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ராமசாமி படையாட்சியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவியும், உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments