வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச சிறை தண்டனை 10 வருடங்களாக உயர்வு-முதலமைச்சர் அறிவிப்பு

0 1159
வரதட்சணை கொடுமை வழக்குகளில் அதிகபட்ச சிறை தண்டனை பத்தாண்டுகளாக உயர்த்தப்படுவதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வரதட்சணை கொடுமை வழக்குகளில் அதிகபட்ச சிறை தண்டனை பத்தாண்டுகளாக உயர்த்தப்படுவதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், வரதட்சணைக் கொடுமையால் மரணம் நேர்ந்தால் குற்றவாளிகளுக்கான குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

குற்றநோக்குடன் செய்யப்படும் குற்றங்களுக்குக் குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாகவும், அதிகப்பட்ச சிறைத் தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும் உயர்த்தப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.

தவறான குற்ற நோக்குடன் பெண்களைப் பின்தொடரும் குற்றங்களுக்கான சிறைத் தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும், பாலியல் தொழிலுக்காகச் சிறுமியரை விற்பது, விலைக்கு வாங்குவது உள்ளிட்ட குற்றங்களுக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும் அதிகப்பட்சம் ஆயுள் தண்டனையும் வழங்கவும் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

வேலூரில் செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றும், அது நடப்பாண்டிலேயே செயல்படத் தொடங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments