நீட் தேர்வு வினாத்தாளில் 97விழுக்காடு வினாக்கள் தமிழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை-பேராசிரியர்கள்

நீட் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களில் 97 விழுக்காடு வினாக்கள் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்ததாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களில் 97 விழுக்காடு வினாக்கள் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்ததாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஞாயிறன்று நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். நீட் தேர்வு வினாத்தாளில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இடம்பெற்ற 97 விழுக்காடு வினாக்கள் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் பாடநூல் குழுவைச் சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரியல் பாடத்தில் 87 வினாக்களும், வேதியியல் பாடத்தில் 43 வினாக்களும், இயற்பியல் பாடத்தில் 44 வினாக்களும் 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
Comments