முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவி தற்கொலை... ஆன்லைன் வகுப்பு அழுத்தத்தால் விபரீதம்!

0 18128
முதலமைச்சரிடம் பரிசு பெற்ற மாணவி சுபிக்‌ஷா

பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதலமைச்சரிடம் பரிசுபெற்ற மாணவி, ஆன்லைன் வகுப்பு காரணமாக அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வீட்டுப்பாடங்கள் செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கு  ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர் மகள் சுபிக்‌ஷா மதுரையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10 - ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தினமும் ஆன்லைன் மூலமே பாடங்களைப் படித்து வந்தார்.

தினமும், அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் சுபிக்‌ஷா இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக பள்ளிகளில் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை செய்து வந்துள்ளார். சரியாக உறக்கம் இல்லாததால் கடந்த சில நாள்களாகவே சோர்வாக இருந்துள்ளார். அதீத வீட்டுப்பாட சுமை காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கடந்த 14 - ம் தேதி இரவு கழிவறைக்குச் சென்று தூக்கிட்டுக்கொண்டார். தகவல் அறிந்த திருபுவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரிடம் மாணவியின் தந்தை சத்தியமூர்த்தி கூறுகையில், “என்னுடைய மகள் நன்றாக படிக்கக் கூடியவள். பேச்சுப் போட்டியில் சிறுவயதிலிருந்தே திறமை மிக்கவள். மதுரையில் நடந்த நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் பற்றி பேசி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட பரிசு பெற்றுள்ளாள். தொடக்கத்தில், ஆன்லைன் வகுப்புகளில் வீட்டுப்பாடம் குறைவாகவே இருந்தது. ஆனால், பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் என் மகள் இரவு 11 மணி வரை பாடங்கள் கவனிப்பது, வீட்டுப்பாடம் செய்வது என்று இருந்தாள். இந்த நிலையில் தான் திடீரென்று தூக்குப்போட்டுக்கொண்டாள்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments