பீகார்- உ.பி. மாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு

0 507
பீகார்- உ.பி. மாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை: ஒரே நாளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு

பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இடிமின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர்.

கோபால்கஞ்ச், போஜ்பூர், ரோட்டாஸ் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 15 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர், கவுசாம்பி, குஷிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் 13 பேர் மின்னல்தாக்கி பலியாகினர்.

வடமாநிலங்களில் வறண்ட வானிலை காணப்பட்ட போதும் இந்த இரு மாநிலங்களில் மட்டும் கன மழை பெய்து வருகிறது. அடுத்த 3 அல்லது நான்கு நாட்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments