இறுதி செமஸ்டருக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்...

பொறியியல் படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை 10 முதல் 11 மணி, பகல் 12 முதல் 1 மணி, மதியம் 2 முதல் 3 மணி, மாலை 4 முதல் 5 மணி வரை என்று ஒரு நாளைக்கு 4 முறை வெவ்வேறு பாடப்பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் விரிவான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Comments