பெய்ரூட்டில் வணிக வளாகத்தில் தீ விபத்து: ஒரே வாரத்தில் 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் பீதி

0 642
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வணிக வளாகத்தில் தீ விபத்து: ஒரே வாரத்தில் 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் மக்கள் பீதி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.

இங்கிலாந்து கட்டடக் கலைஞர் ஜஹா ஹதீத் வடிவமைத்த புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி நெருப்பை அணைத்தனர். கடந்த மாதம் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள பின்பு, அங்கு ஒரே வாரத்தில் 4 வெவ்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருவது நகர மக்களை நிம்மதியிழக்கச் செய்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments