ஐநா.சபையின் மூன்று பதவிகளில் இந்தியா வெற்றி..!

0 5451
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐ.நா. பெண்கள் நிலை தொடர்பான ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்.

இதே போல் பொருளாதார சமூக கவுன்சில் மற்றும் நிகழ்ச்சி திட்டமிடல் குழுவான CPC ஆகிய இரண்டு ECOSOC பதவிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

75வது ஐநா பொதுச்சபை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு ஐ.நா.சபையின் முக்கிய பதவிகளில் கிடைத்த இந்த வெற்றி கூடுதல் வலிமையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments