"செப்.21 முதல் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்"

0 3549
"செப்.21 முதல் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்"

வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரயில்களை, இயக்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் 310 வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேவை கருதி கூடுதலாக 20 சிறப்பு ஜோடி ரயில்களை இயக்க உள்ளதாகவும், வரும் 19ம் தேதி முதல் அதற்கான முன்பதிவு தொடங்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு என எந்த சிறப்பு ரயில்களும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments