சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

0 2614
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 21-ந் தேதி வரை 5 நாட்கள் தினசரி பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையொட்டி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது. ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments