இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன் முதுநிலை மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

0 749
இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன் முதுநிலை மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில், இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என, கல்லூரி கல்வி இயக்குனரகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் பைனல் செமஸ்டர் தேர்வு நடத்தும் முன்னரே, சில கல்லூரிகள் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்துவதாகச் சொல்லப்படுகிறது.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன்னர், பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments