இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளது..!

0 1269

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்திலேயே இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழுவதும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் 2 தடுப்பூசிகளின் முதல் கட்ட சோதனை நிறைவடைந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜைதஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிந்து, அதன் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு, பிளாஸ்மா தெரபி சிகிச்சையை தொடரலாமா என்பது குறித்து தேசிய கொரோனா தடுப்பு குழு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பு குழு முடிவெடுக்கும் என்றும் பார்கவா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments