இன்னும் 7 மாதத்தில் திமுக ஆட்சியில் அமரும் - மு.க.ஸ்டாலின்

0 2465
இன்னும் 7 மாதத்தில் திமுக ஆட்சியில் அமரும் - மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வையோ, இந்தி திணிப்பையோ தமிழக அரசால் தடுக்க முடியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய அவர், இன்னும் 7 மாதத்தில் திமுக ஆட்சியில் அமரும் என்றார். 

முன்னதாக, பெரியார் விருது மீனாட்சிசுந்தரத்திற்கும், அண்ணா விருது ராமசாமிக்கும், கலைஞர் விருது உபயதுல்லாவிற்கும், பாவேந்தர் விருது தமிழரசிக்கும், பேராசிரியர் விருது ராஜகோபாலுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் பகுதியாக "எல்லோரும் நம்முடன்" என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments