அலெக்சாவில் இடம் பெறுகிறது அமிதாப் பச்சன் குரல்

0 797
அலெக்சாவில் இடம் பெறுகிறது அமிதாப் பச்சன் குரல்

அமேசான் நிறுவனத்தின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் விரைவில் அமிதாப் பச்சன் குரல் அறிமுகமாகிறது.

இதுகுறித்து அமேசான் நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அமிதாப் பச்சனுடன் இணைந்து அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது.

இதற்கென அமிதாப் பச்சன் அமேசான் நிறுவனத்துடன் பணியாற்றுகிறார் என்றும், அமிதாப் பச்சன் குரல் மட்டுமின்றி அவரது ஜோக்குகள், அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை மற்றும் பேச்சு மொழி உள்ளிட்டவை அலெக்சாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயனர்கள் அலெக்சாவிடம் ஏதேனும் கேள்வி கேட்டு அமிதாப் பச்சன் குரலில் அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இந்த அம்சம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments