மீட்கப்பட்ட 9 மீனவர்கள்... மியான்மர் கடற்படையினருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

0 618
மீட்கப்பட்ட 9 மீனவர்கள்... மியான்மர் கடற்படையினருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

வங்ககடலில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று திசைமாறி காணாமல் போன 9 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டதற்காக, மியான்மர் கடற்படையினருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னையைச் சேர்ந்த 9 ஏழை மீனவர்களை, தாயகம் அழைத்து வர, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தையும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், கூறியுள்ளார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்கள், 55 நாட்களுக்கு பிறகு மியான்மர் நாட்டு கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments