ஐதராபாத்தில் கணக்கில் காட்டாத ரூ.3.75 கோடி பறிமுதல் - 4 பேர் கைது

0 705
ஐதராபாத்தில் கணக்கில் காட்டாத ரூ.3.75 கோடி பறிமுதல் - 4 பேர் கைது

ஐதராபாத்தில் கணக்கில் காட்டாத மூன்றே முக்கால் கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் பன்ஜாரா ஹில்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த 2 கார்களை  தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

கார்களில் இருந்த குஜராத்தை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மும்பையை சேர்ந்த விஜய் அன் கோ என்ற நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றி வந்ததும், பணத்துடன் சோலாபூர் நோக்கி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இது ஹவாலா பண பரிமாற்றமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட 4 பேரையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments