சீனாவின் தொடர் அத்துமீறல்களை, இந்தியா உறுதியாக முறியடித்து வருகிறது - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1631
சீனாவின் தொடர் அத்துமீறல்களை, இந்தியா உறுதியாக, முறியடித்து வருவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் தொடர் அத்துமீறல்களை, இந்தியா உறுதியாக, முறியடித்து வருவதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் முதலே, சீன தனது துருப்புகளை அதிகரித்த வண்ணமே இருக்கிறது என்றார்.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறத்தில், சீனா அத்துமீறுவதால், பரஸ்பர பேச்சுவார்த்தையில் மற்றும் அமைதி நடவடிக்கையில், தொடர்ந்து, விரிசல் நிலவுவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லடாக் பிராந்தியத்தில், 38 ஆயிரத்து 180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை, சீனா சொந்தம் கொண்டாட முயற்சிப்பதாக, அவர் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு சொந்தமான ஒரு அங்குல இடத்தைக் கூட விட்டுக் கொடுக்க முடியாது என்று, திட்டவட்டமாகவும், உறுதியாகவும், சீனாவுக்கு தெளிவுபட தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

பரஸ்பரம் அமைதி தீர்வு காண சீனா தயாராக இல்லை என்றும் வேதனை வெளியிட்டார். ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும், சீனா அத்துமீற முயன்றதாகவும், அதனை முன்கூட்டியே கணித்து, இந்திய தடுத்தாண்டுவிட்டதாகவும், ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

மீண்டும், மீண்டும், எல்லையில், சீனா அத்துமீற முயன்றால், இந்தியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்றும், உரிய பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ராஜ்நாத்சிங் தெரிவித்திருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments