டெல்லி சட்டமன்ற குழு விசாரணைக்கு ஆஜராக ஃபேஸ்புக் மறுப்பு

0 482
டெல்லி சட்டமன்ற குழு விசாரணைக்கு ஆஜராக ஃபேஸ்புக் மறுப்பு

பாஜக மற்றும் வலதுசாரி தலைவர்களின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்களை அனுமதித்ததாக கூறப்படும் விவகாரத்தில், டெல்லி சட்டமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்து விட்டது.

டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் சமாதான குழுவினர் இது தொடர்பாக அனுப்பிய சம்மனுக்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகம், ஏற்கனவே எம்பிக்கள் நிலைக்குழுவில் தமது பதிலை அளித்து விட்டதால், டெல்லி அரசின் விசாரணையை சந்திக்க வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என அந்த பதிலில் கூறியதால், ஆத்திரமடைந்துள்ள டெல்லி சட்டமன்ற குழு, மீண்டும் சம்மன் அனுப்பப்படும், அப்போதும் வரவில்லை என்றால்  ஃபேஸ்புக் நிர்வாகிகள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments