சென்னை சாலிகிராமத்தில் இயங்கும் சிறப்பு சித்தா மருத்துவமனை மூடல்..?

0 578
சென்னை சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில், சித்த மருத்துவர் வீரபாகு தலையில் இயங்கும் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சித்தா மருத்துவமனை மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிறப்பு கொரோனா சித்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதை நிறுத்திக் கொண்டதாக  சித்த மருத்துவர் வீரபாகு கூறியுள்ளார்.

இந்த மருத்துவமனையில் புதிய நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்பதால் அது மூடப்படுவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாகு, 5400 நோயாளிகளுக்கு தமது சொந்த செலவில் வைத்தியம் பார்த்ததாக கூறினார்.

தம்மிடம் சிகிச்சை பெற்ற எவரும் தம்மை பற்றி எந்த புகாரும் அளிக்கவில்லை என்றார் அவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments