’கைலாசா பெண்களைத் திருமணம் செய்துகொடுங்கள்’ - வைரலாகும் 90ஸ் கிட்ஸ் எழுதிய கடிதம்!

0 99929
நித்யானந்தா

திருமணம் ஆகாமல் தவித்துவரும் எங்களுக்குக் கைலாசா நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துவைக்குமாறு 90ஸ் கிட்ஸ்கள் நித்தியானந்தாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார். அவர் எங்கு மறைந்துள்ளார் எனும் விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களுக்கு அவர் பதில் அளிப்பதுண்டு. இதற்கு முன்பு கைலாசாவில் உணவகம் தொடங்க வேண்டும் என்று ஒருவர் மதுரை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதில் அளித்த நித்யானந்தா, திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

image

இதைத்தொடர்ந்து, பல்வேறு ஆண்டுகளாகத் திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் நித்யானந்தாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்...

திருமண வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதத்தில், “சுவாமி 1990 - ம் ஆண்டுகளில் பிறந்த நாங்கள் பல ஆண்டுகளாகத் திருமணம் ஆகாமல் தவித்து வருகிறோம். எங்களுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் தவித்து வருகிறோம். தயவுசெய்து, தங்கள் ஆசிரமத்தில் உள்ள பெண்களை எங்களுக்குத் திருமணம் செய்து கொடுத்து கைலாசா நாட்டில் குடியுரிமையுடன், அரசாங்க வேலை கொடுத்து எங்கள் மனக்கவலையைத் தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கடிதத்துக்குச் சாதகமான பதிலை நித்யானந்தா அளிப்பார் என்றும் 90ஸ் கிட்ஸ்கள் ஏக்கத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments