சென்னையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் - மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

0 23573
சென்னையில் சாலையோரம் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்...

சென்னை புளியந்தோப்பு பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புகாரில் மின்வாரிய ஊழியர்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பூமிக்கடியில் சென்ற மின்சார கேபிளில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சாலையில் நடந்து சென்ற அலிமா என்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதின் அடிப்படையில்,  உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன் மற்றும் இளைநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி எந்த இடத்திலும் மின்கசிவோ பழுதோ இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments