அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வேகமாக பரவும் காட்டுத்தீயின் பாதிப்புகளால் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்

0 857
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வேகமாக பரவும் காட்டுத்தீயின் பாதிப்புகளால் சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயின் பாதிப்புகள், ஹெலிகாப்டர் வழியே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் எரிந்து வரும் காட்டுத் தீ, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

இதில், ஆயிரக்கணக்கான வீடுகளும் 40 லட்சத்துக்கும் அதிகமாக ஏக்கர் வனமும் எரிந்து நாசமான நிலையில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அடத்தியான புகை மற்றும் சாம்பல்களை உருவாக்குவதால் காற்றின் தரம் மோசமடைந்து வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments