கொரோனா காலத்தில் 1.04 கோடி தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

0 420

கொரோனா காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் புலம் பெயர்ந்ததாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் ஒரு கோடியே 4 லட்சம் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் காயமடைந்ததாகவோ, உயிரிழந்ததாகவோ தகவல்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments