ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு

0 1576

ஜப்பானின் புதிய பிரதமர் யார் ? என்ற வாக்கெடுப்பில், பதவி விலகிய பிரதமர் SHINZO ABE - வின் தீவிர ஆதரவாளரும் அந்நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளருமான YOSHIHIDE SUGA அபரிமிதமாக வெற்றி பெற்றுள்ளார்.

ஜப்பானின் நீண்ட நாள் பிரதமரான SHINZO ABE உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் பதவி விலகினார். இந்த சூழலில், ஆளும் மிதவாத கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் SUGA வுடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் SHIGERU ISHIBA மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் FUMIO KISHIDA ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், 71 வயது SUGA, 534 வாக்குகளில் 377 வாக்குகள் பெற்று, ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர், பிரதமர் பதவி வகிப்பது வழக்கம்என்பதால், YOSHIHIDE SUGA , அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் வரை, பிரதமர் பதவி வகிப்பார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments