ஆந்திரா மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தகவல்

0 1475
ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்.

ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்.

இதன் காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாகவும், தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 45-55   கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் செப்டம்பர் 14-ம் தேதி மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments