சத்தீஸ்கர்-தெலுங்கானா வனப்பகுதியில் சாரை சாரையாக ஆற்றைக் கடந்து செல்லும் மாவோயிஸ்ட்டுகள் ?

0 6413
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நூற்றுக் கணக்கானோர் சாரை சாரையாக ஆற்றைக் கடந்து செல்வது போன்ற ட்ரோன் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நூற்றுக் கணக்கானோர் சாரை சாரையாக ஆற்றைக் கடந்து செல்வது போன்ற ட்ரோன் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்களை மாவோயிஸ்டுகள் அதிக அளவில் நடமாடும் வனப்பகுதிகளில் பறக்க விட்டு சத்தீஸ்கர் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு பறக்க விடப்பட்ட ட்ரோன் கேமரா ஒன்று, தெலங்கானா மாநில எல்லையில் இருக்கும், சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நதி ஒன்றை ஆயுதங்களுடன் கடந்து செல்வதை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது பற்றி தெலுங்கானா மாநில போலீசாருக்கும் எச்சரிக்கப்பட்டு, இரு மாநில எல்லைகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments